search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி"

    • ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது
    • வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.

    பவானி

    பவானி அருகே உள்ள காடையாம்பட்டி முருகன் கோவில் வீதியில் வசிப்பவர் ஆனந்த் (21). கட்டிட தொழிலாளி.

    மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆனந்தின் தாய் கண்டித்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டின் கதவை சாத்திக்கொண்டு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.

    உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அவர்கள் வந்து பார்த்த போது ஆனந்த் இறந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பவானி சப்இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த ஆனந்த் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி குளுமைக்காடை பகுதியை சேர்ந்தவர் எஸ்தாக் (வயது 58), கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் குடிபோதையில் எஸ்தாக் வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு தூங்க சென்றார். நேற்று காலை அவரது மனைவி எஸ்தாக்கை எழுப்பியபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக உறவினர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் உள்ள டாக்டர்கள் எஸ்தாக்கை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து எஸ்தாக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக எஸ்தாக் மகள் சுஜி (27) கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்
    • விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது.

    திருப்பூர்:

    விருதுநகரை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 35) . இவர் மங்கலம், கோம்பக்காட்டு புதுாரில் பகுதியில் தங்கியிருந்து கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனர்.

    முத்துசெல்வம் கடந்த ஜனவரி 1-ந் தேதி அதிகாலை நேரத்தில் அறையில் இருந்து சென்றவர் நீண்ட நேரமாக காணவில்லை. இதையடுத்து அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இது குறித்து மங்கலம் போலீசார் விசாரித்தனர்.

    இதில் அதிகாலை நேரத்தில் விசைத்தறி கூடம் அருகே முத்து செல்வம் நடந்து சென்ற போது திருடன் என சந்தேகித்து, விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, துரைபழனிசாமி (45), சவுந்தரராஜன் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.

    போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் இச்சிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (50), கோம்பக்காட்டு புதுாரை சேர்ந்த முருகேசன் (35) ஆகிய இருவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • முந்திரி ஆலை சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்தார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட திக்குறிச்சி சேம்புவிளை பகுதியை சேர்ந்தவர் பிபின் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி வெலிகல் அருகே முந்திரி ஆலை சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவரை பரி சோதித்துப் பார்த்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
    • கார்பெண்டர் வேலை செய்யும் லாரன்ஸ் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஏர்கன் துப்பாக்கியால் பறவைகளை சுடும்போது குறி தவறி கட்டிட வேலை செய்பவர் கையில் பட்டதும் தெரியவந்தது.

    கொளத்தூர்:

    சென்னை மாதவரம் பால் பண்ணை, பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் சென்டஸ்க் (வயது 31). வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது வலது கையில் திடீரென ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அருகில் இருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது வலது கையில் குண்டு பாய்ந்து இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அதே பகுதியில் 60 அடி தூரத்தில் உள்ள கட்டிடத்தின் மாடியில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. அவரையும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் கார்பெண்டர் வேலை செய்யும் லாரன்ஸ் (வயது 32) என்பதும் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஏர்கன் துப்பாக்கியால் பறவைகளை சுடும்போது குறி தவறி கட்டிட வேலை செய்பவர் கையில் பட்டதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சென்டஸ்க் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்துள்ள திரளி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஹம்சவர்தணி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டு சென்ற குமரேசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் திரளி கவுண்டமா நதி தடுப்பணை அருகே ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இதுதொடர்பாக போலீ சார் விசாரணை நடத்திய போது தடுப்பணை யில் இறந்து கிடந்தது குமரேசன் என தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் தெங்கன் குழி விளை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 33), கொத்தனார்.

    இவர் சரஸ்வதி (21) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மகேஷ் குமார் -சரஸ்வதி தம்பதியினர் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் வசித்து வந்தனர். சரஸ்வதி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் மகேஷ் குமார் மட்டும் இருந்தார். இன்று காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மகேஷ் குமாரை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை .இதையடுத்து ஜன்னல் வழியாக சரஸ்வதி பார்த்தபோது மகேஷ் குமார் தூக்கில் பிணமாக தூங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார் .இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மகேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது காவலர்கள் ஒழுங்கான முறையில் சீருடை அணிந்து வருகிறார்களா? மேலும் வட்ட ஆய்வாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளையும் பார்த்து சேதம் ஏதும் அடைந்துள்ளதா? என்ப தையும் ஆய்வு செய்தார். மேலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஒழுங்கான முறையில் பராமரித்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

    மேலும் வருகை பதிவேடு உள்பட காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவ ணங்களையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை அழைத்து பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று ஆலோசனை வழங்கினார். மேலும் காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் காவலர்கள் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். மேலும் பணியின்போது காவலர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளையும் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது கன்னி யாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலாத்தலமான சொத்தவிளை கடற்கரை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்ற னர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளது. சுசீந்திரம் கோவில் திரு விழா நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அந்த பகுதிகளில் போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும். இதை சமாளிக்கும் வகையில் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதி களில் திருட்டு, கொலை சம்ப வங்கள் நடைபெ றாமல் தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேரத் தில் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் நடந்த கட்டிட தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக முக்கிய தடையம் சிக்கி உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • இது குறித்து சென்னிமலை போலீசில் கவின் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சென்னிமலை போலீசார் அஜயை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து அஜயை பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே தோப்புப்பாளையம் எம்.பி.என்., காலனியைச் சேர்ந்தவர் கவின்குமார்(23)கவின்குமார் தனது தாய் சாந்தியுடன் கடந்த 21-ந் தேதி சென்னிமலை வார சந்தைக்கு வந்து விட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது மொபட்டை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சாந்தியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டார்.

    அப்போது சங்கிலியை சாந்தி கெட்டியாக பிடித்து கொண்டதால் 1½ பவுன் அளவுள்ள தங்க சங்கிலி மட்டும் மர்ம நபர் பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீசில் கவின் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் அருகே பெருந்தொழுவு ரோடு, அமராவதி நகரை, சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜய் (23) என்பவர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னிமலை போலீசார் அஜயை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து அஜயை பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர். 

    • அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி எட்டாமடை குருசடி காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கட்டிட தொழிலாளி (வயது 37). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக செல்வராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்வராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள சிக்கந்தர் சாவடி, சுசி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு மகன் உத்தமராஜா உள்ளார்.

    கட்டிட தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியில் லோடுமேனாக வேலை பார்க்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.சம்பவத்தன்று நள்ளிரவு இவர் கூடல்நகர் மெயின் ரோட்டுக்கு வந்தார். அப்போது இரும்புக்கடை அருகே 3 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கும்பல் உத்தமராஜாவை கத்தியால் குத்தி விட்டு தப்பியது.படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தாயார் பாண்டியம்மாள், கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தமராஜாவை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சிந்தாமணி, கல்லுடையான் கோவில் தெரு சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (23), சிக்கந்தர் சாவடி, மந்தை அம்மன் கோவில் தெரு ராஜா (40), கோவில்பாப்பாகுடி, மதர் தெரசா ரோடு தினேஷ் குமார் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    • விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.
    • நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா்.

     தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த மூலனூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (வயது 53). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் 22 ந் தேதி சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.

    இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் அப்பாஸ் (29). பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் அவிநாசி மகளிா் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் அப்பாசை 2020 ஆகஸ்ட் 16ந் தேதி கைது செய்தனா்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அப்பாசுக்கு 25 ஆண்டுகள் சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த இரு வழக்கிலும் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜராகினாா்.

    ×